
இல்லத்தரசிகளிக்கும், பெண்களுக்கும் சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமான விழிப்புணர்வு வழங்கிய மதுரை C1, காவல் நிலைய தலைமை காவலர்
தமிழகத்தில் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக காவல் துறையினர் பொதுமக்களுக்கு அவ்வப்போது போதிய விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர் இதில் தமிழக காவல்துறை டி.ஜி.பி., முதல் காவல் நிலையங்களில் பணிபுரியும் சாதாரண காவல்கள் வரை சரியான விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் C1, காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் திரு. அப்துல்ரஹிம் அவர்கள் பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு ஆடியோ வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது:
அப்துல்ரஹிம் ஆகிய நான் இந்த விழிப்புணர்வை பதிவு செய்கிறேன். படித்த பெண்கள் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஏதாவது ஒரு வேலை செய்து வீட்டிற்கு உதவலாம் கணவருக்கு உதவலாம் என்று எண்ணத்துடன் இருப்பார்கள் இந்த எண்ணத்தை புரிந்து கொண்டு சில சமூக விரோத கும்பல் வீட்டிலிருந்தே வேலை என கூறி பெரிய பெரிய நிறுவனத்தின் பெயரை போட்டுக்கொண்டு ஒரு வாட்ஸ்அப் நம்பரை அனுப்புவார்கள் அந்த வாட்ஸ்அப்பில் அதிகமான சம்பளம் குறைவான வேலை படிப்பு அவசியமில்லை என கூறி உங்களை ஏமாற்றுவார்கள் அதை நீங்கள் நம்பி அந்த வாட்ஸ்அப் நம்பருக்கு உங்கள் ஆதார் அட்டை உங்களது புகைப்படம் வங்கி கணக்கு ஆகிய உங்களது முழு விபரங்களையும் அவர்களுக்கு அனுப்பி வைப்பீர்கள் மறுநாளே உங்களது போட்டோவுடன் உங்களுக்கான ஐ.டி.,கார்டு உங்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு வரும் அந்த சந்தோசத்தில் நாம் வேலையில் சேர்ந்து விட்டோம் என நினைத்து கொண்டிருக்கும் போது உங்களது அப்பாயின்மென்ட் காப்பி அனுப்ப ஒரு சிறு தொகையை அவர்கள் ஜீ பே நம்பருக்கு அனுப்ப சொல்லுவார்கள் நீங்களும் அனுப்பி விடுவீர்கள் இப்போது அவர்களுக்கு உங்கள் போட்டோ ஆதார் கார்டு வங்கி கணக்கு விபரங்கள் உங்களது மாதிரி கையெழுத்து உங்களுடைய முழுவிபரமும் அவர்கள் கைக்கு போய் விடும் அதன் பிறகு உங்களுக்கு மெட்டிரியல் பேக் செய்து அனுப்ப வேண்டும் அதற்கு நீங்கள் பணம் அனுப்ப வேண்டும் எனக்கூறி சிறிது பணம் அனுப்ப சொல்லுவார்கள் இதையும் நம்பி சிலர் பணம் அனுப்புவார்கள் இந்த மாதிரி பணம் அனுப்பாதவர்களை மீண்டும் மீண்டும் பணம் அனுப்ச்சொல்லி தொல்லை செய்வார்கள் இல்லெ எனக்கு இந்த வேலை வேண்டாம் என்று நீங்கள் சொன்னால் அதிலிருந்து நீங்கள் வெளியில் வர ஒரு தொகை அனுப்பச் சொல்லுவார்கள் இல்ல அனுப்ப முடியாது என்று கூறினால் இல்லை நீங்கள் அப்பாயின்மென்ட் ஆகி விட்டீர்கள் நீங்கள் அனுப்பிதான் ஆக வேண்டும் இல்லையெனில் உங்கள் மீது வழக்கு போடுவோம் என மிரட்டுவார்கள் இந்த மாதிரி ஏமாற்று வேலைக்காரர்களிடம் பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் அதிகமான பெண்கள் பாதிக்கப்படுவதால்தான் ஏமாற்று பேர்வளிகள் இந்த மாதிரி மிஸ்யூஸ் செய்கிறார்கள் இந்த மாதிரி நீங்கள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் பயப்பட தேவையில்லை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒருமுறை பணம் அனுப்பினால் மீண்டு மீண்டும் பணம் அனுப்ப சொல்லுவார்கள் அனுப்பவில்லையென்றால் உங்களது ஆதார் வங்கி விபரம் புகைப்படம் எங்களிடம் உள்ளது என மிரட்டுவார்கள் அதற்கெல்லாம் பயப்பட வேண்டாம் மேலும் இது போன்ற விளம்பரங்கள் வந்தால் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டாம் என காவல் துறை சார்பாக கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு விழிப்புணர்வு ஆடியோவில் அவர் கூறியுள்ளார்
