
கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவ ஹெல்ப் லைன் வசதி-மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி
கோவை, இடையர் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு நின்றிருந்த வடமாநிலத் தொழிலாளர்களை சிலர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை வெரைட்டிஹால் சாலை போலீஸ் நிலையத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்குப் பிறகு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை, இடையர் வீதியில் நின்று பேசிக் கொண்டிருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் 12-ந் தேதி இரவு தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தாக்குதல் நடத்திய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் போலீஸார் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவையில் வசிக்கும் வடமாநிலத் தொழி லாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமா நிலத்தொழி லாளர்கள் சங்க நிர்வா கிகளும் போலீசாருடன் தொடர்பில் உள்ளனர்.
வட மாநிலத் தொழிலா ளர்களுக்கு உதவ போலீஸ் துறை சார்பில் ஹெல்ப் லைன் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் பிரச்னை எதுவும் ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள போலீசாரின் தொடர்பு எண்கள் அச்சிடப்பட்ட கார்டுகள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இது தவிர போலீஸ் கட்டுப்பாட்டு அறையை 100 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தற்போது காவல் கட்டுப்பாட்டு அறையில் இந்தி தெரிந்த போலீசாரும் பணியமர்த்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

