சென்னையில் 6 வாரத்தில் ரூ.5 கோடி அபராதம் வசூல்
சென்னையில் மது போதையில் வாகனங்கள் ஓட்டிய வழக்குகளில் இதுவரை காவல்துறை ரூபாய் 6 கோடி அபராதம் வசூல் செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை காவல்துறை விபத்தை குறைக்கும் வகையில் மோட்டார் வாகனச்சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளை குறைத்து வருகிறது. அதன்படி கடந்த 6 வாரத்தில் போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ. 5,09,16,000/-அபராதம் வசூல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என வாகன
ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது