
கஞ்சா-லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
மதுரை தல்லாகுளம் போலீசார் ஜம்புராபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆஸ்பத்திரி அருகே வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவரிடம் 3 லாட்டரி சீட்டுகள் இருந்தன. அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள், 2 ஏ.டி.எம். கார்டு, ரூ.4075 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை கீரைத்துறை போலீசார் காமராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இந்திரா நகரில் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அண்ணா மேலவீதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அதேபகுதியில் வசிக்கும் கணேசன் மகன் பிரேம்குமார்(வயது22) என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கீரைதுறை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை அனுப்பானடி பஸ் நிலையம் அருகே 100 கிராம் கஞ்சாவுடன் சுந்தர்ராஜபுரம், ரகுராமன் மனைவி பஞ்சு(32) என்பவரை போலீசார் பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
