அதிக கனிம வளங்கள் ஏற்றி வந்த 8 லாரிகளுக்கு அபராதம்
தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர் அவர்களின் தலைமையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் அதிக பாரங்கள் ஏற்றி செல்வதை கண்டறிந்து உடனடி அபராதம் விதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செங்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளவரசி அவர்களின் தலைமையில் போலீசார் செங்கோட்டையருகே பிரானூர் பார்டர் அருகே வாகன சோதனை செய்தர் அப்போது கேரளாவிற்கு கனிமவளங்கள் ஏற்றி வரிசையாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அளவுக்கு அதிகமான கனிமவளங்கள் பாரம் ஏற்றி வந்திருப்பதை கண்டு பிடித்தனர் இதனையடுத்து அதிக பாரம் ஏற்றி வந்த 8 லாரிகளுக்கு ரூ. ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 550 அபராதம் விதித்தனர்.
ஏற்கனவே தென்காசி நெல்லை மாவட்டங்களிலிருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வளர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிப்பதோடு அந்த லாரிகளில் உள்ள அதிக அளவு கனிம வளங்களை பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.