
கோவை மத்திய ஜெயிலில் செல்போன்களை பதுக்கி வைத்துஇருந்த கைதிகள் மீது வழக்குப்பதிவு
கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். ஜெயிலுக்குள் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி சில கைதிகள் செல்போன்களை பதுக்கி வைத்து பயன்படுத்துவதாக ஜெயில் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து கோவை மத்திய ஜெயில் ஜெயிலர் சிவராஜன் தலைமையிலான போலீசார் ஜெயில் முழுவதும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் கைதிகள் 11 பேர் செல்போன்களை மறைத்து வைத்து பேசி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கோவை மத்திய ஜெயில் ஜெயிலர் சிவராஜன் செல்போன்க ளை பதுக்கி வைத்து பயன்படுத்திய கைதிகள் மீது ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் ஜெயிலுக்குள் செல்போன்களை மறைத்து வைத்து பயன்படுத்தி வந்த 11 கைதிகள் மீது தடை செய்யப்பட்ட பொ ருட்களை பயன்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

