
உங்களுக்கு தெரியுமா..?
விபத்தில் மரணம் அடைந்தால் வக்கீலை வைத்து வழக்கு நடத்தி நிவாரணம் பெறுகின்றோம். அதற்கான வழக்கறிஞர் கட்டணம் எவ்வளவு
நம் குடும்ப உறுப்பினர்கள் உயிரைக்கொடுத்ததால் வரும் நிவாரணத் தொகையில் வழக்கறிஞர்கள் 15% முதல் 50% வரை பெற்றுக்கொள்கின்றனர்.
ஆனால், உண்மையாக அவர்களுக்கு அவ்வளவு தொகை கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள்.
உண்மையில் தீர்ப்பு எழுதும் பொழுது தீர்ப்பில் வழக்கறிஞருக்கு உண்டான செலவுத்தொகை என்று அதில் குறிப்பிடப்படும் தொகையே கொடுக்கப்பட வேண்டும். நீதிபதிகள் சில நேரங்களில் இதை குறிப்பிடுவதில்லை.
இதை நாம் தான் கட்டாயமாக தீர்ப்பு எழுதும்போது கேட்டுப் பெற வேண்டும். இது மிகவும் சொற்பமான தொகையாகும்.
நமது குடும்ப உறுப்பினர் விட்ட உயிருக்கான நிவாரண தொகையை யாரோ ஒருவர் அனுபவிப்பதா ?
ஏற்கனவே விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வழக்கறிஞரிடம் கொடுத்த தொகையினையும் எவ்வித சட்ட சிக்கலும், வில்லங்கமும் இல்லாமல் திரும்ப பெறலாம்.
