Police Department News

சிவகிரி அருகே கடையின் பூட்டை உடைத்து கொள்ளை -2 பேர் கைது

சிவகிரி அருகே கடையின் பூட்டை உடைத்து கொள்ளை -2 பேர் கைது

சிவகிரி அருகே தேவிபட்டணம் மந்தையில் காளிமுத்து என்பவர் பழக்கடை மற்றும் ஜுஸ் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு 10 மணியளவில் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். இரவு 11 மணி அளவில் அதே ஊரைச் சேர்ந்த தேவர் மணல் மேட்டுத் தெருவை சேர்ந்த தங்க முனீஸ்வரன் (வயது 26) மற்றும் அய்யனார் (வயது 20) ஆகிய இருவரும் கூட்டாக கடையில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.10 ஆயிரம் மற்றும் தின்பண்டங்களையும் அள்ளிக்கொண்டு சென்றனர். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதை பார்த்து சிவகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published.