Police Department News

பாலக்கோடு அருகே கலவரத்தில் முடிந்த கிராமசபை கூட்டம்

பாலக்கோடு அருகே கலவரத்தில் முடிந்த கிராமசபை கூட்டம்

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஆத்திரத்தில் ஆபாச பேச்சால் – கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது.
பெரும்பாலான ஊராட்சிகளில் பெண்களே ஊராட்சி மன்ற தலைவர்களாக இருந்து வரும் நிலையில் அவர்களின் கணவர்கள் ஊராட்சிமன்ற தவைர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

இன்று காட்டம்பட்டி, கெண்டேனஹள்ளி ஊராட்சிகளில் நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில்
வரவு செலவு கணக்கு, குடிநீர் பிரச்சனை, சாக்கடை கால்வாய்,தெரு விளக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர் இதற்கு பெண் தலைவர்கள் உரிய பதில் அளிக்காததால் அருகில் இருந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்கள் கேள்வி கேட்ட பொதுமக்களை தகாத வார்த்தைகளாலும், ஆபாசமாக பேசியதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலக்கோடு ஒன்றியத்தில் பெண்கள் தலைவியாக உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் கணவர்களின் தலையீடு அதிகரித்து வருகிறது.
இதனை தமிழகஅரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.