

பாலக்கோட்டில் விதிமுறை மீறி அதிக பயணிகளை ஏற்றி சென்ற 5ஆட்டோக்கள் பறிமுதல் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்கின்றனர்.
இதனால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு தொடர்ந்து புகார்கள் வந்ததின் அடிப்படையில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் அவர்களின் உத்தரவுப்படி, பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, பஸ் நிலையம், சர்க்கரைஆலை, ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டார் அப்போது ஜெகநாதன், அஜித்குமார், சக்திவேல், முரளி, முருகன் ஆகியோர்
விதிமுறை மீறி அதிக அளவில் பயணிகளை ஏற்றி சென்றனர்.
இந்த 5 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து தலா 15 ஆயிரம் என மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து விதிமுறைகளை மீறி ஆட்டோக்களை இயக்கினால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
