பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரி கடைக்கு சீல்,
கடை வாடகை கட்டாததல் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கடையில் மணிவண்ணன் என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை இது நாள்வரை செலுத்தவில்லை, பேரூராட்சி நிர்வாகம் சொத்து வரி, கட்டிட வரி, குடிநீர் வரி கடை வாடகை ஆகியவற்றின் மூலம் பெறப்படும் நிதியிலிருந்து பாலக்கோடு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது,
இந்த நிதியாண்டிற்க்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை வசூல் செய்து வரும் நிலையில் நிதியாண்டு இறுதி என்பதால் பேரூராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
மேலும் மார்ச். 30 ம் தேதிக்குள் நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் மணிவன்னன் தனது பேக்கரி கடைக்கு இதுநாள் வரை வாடகை செலுத்தால் இன்று மாலை பேருராட்சி செயல் அலுவலர் டார்த்தி கடை ஊழியர்களை வெளியேற்றி கடைக்கு சீல் வைத்தார்.
உடன் துப்புரவு மேற்பார்வையாளர் ரவீந்திரன், மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் இருந்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது