
பாலக்கோடு அருகே காவேரியப்பன் கொட்டாய் பகுதியில் செம்மன் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல். டிரைவர் தப்பியோட்டம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள செங்கல்சூளைகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்பட்டு வருவதாக பாலக்கோடு தாசில்தார் ராஜா அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தாசில்தார் ராஜா பாலக்கோடு அருகே உள்ள காவேரியப்பன் கொட்டாய் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார், அப்போது அவ்வழியாக பொப்பிடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது. 28) என்பவர் டிப்பர் லாரியை ஓட்டி வந்தார், வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதியின்றி சட்டவிரோதமாக 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 யூனிட் செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது, உடனடியாக டிரைவர் தப்பியோடி தலைமறைவானார். செம்மண்ணுடன் 3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள டிப்பர்லாரியை பறிமுதல் செய்த தாசில்தார் ராஜா அதனை பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்,
இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமைறைவான லாரி ஓட்டுநர் சிவக்குமாரை தேடி வருகின்றனர்.
