115 வயது பழமையான கட்டிடத்தில் காவல் நிலையம்
மதுரை நகரத்தார் சங்கத்திற்கு சொந்தமான 115 வயது கட்டிடத்தில் தெப்பக்குளம் காவல் நிலையம் 42 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
மேற்படி கட்டிடம் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அதிலிருந்து காலி செய்ய கூறி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மதுரை நகரத்தார் சங்கத்தலைவர் திரு.S.V.சிதம்பரம் அவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள்.
நீதியரசர்கள் R.சுப்பிரமணியன் மற்றும் L.விக்டோரியா கௌரி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதியரசர்கள், 115ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தில் காவல் நிலையம் இருப்பது ஆபத்தானது என்றும், மேலும் கட்டிடம் இடிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு காவல்துறையே பொருப்பேற்றுக் கொள்ளும் என்றும் பிராமண பத்திரம் எழுதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்திரவிட்டு 10.04.2023 அன்று வழக்கை ஒத்தி வைத்தனர்.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் RM.அருண் சுவாமிநாதன் அவர்களும், காவல்துறை சார்பில் மாநில அரசு வக்கில் திலக்குமார் அவரகளும் ஆஜராகினர்.