இன்ஸ்டாகிராமில் பெண் குறித்து அவதூறு பரப்பிய வாலிபர்- போலி ஐ.டி. உருவாக்கி பதிவிட்டது அம்பலம்
தென்காசி பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த ஒரு வருடமாக அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து போன் அழைப்புகள் வந்துள்ளது.
இந்நிலையில் அதில் பேசுபவர்கள் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளனர். அவ்வாறு பேசிய ஒருவருடைய செல்போன் எண் மூலம் இன்ஸ்டாகிராமில் ஒரு போலியான கணக்கு தொடங்கப்பட்டு, அதன் மூலமாக தன்னை பற்றி அவதூறு செய்தி பலருக்கும் பகிரப்பட்டு உள்ளதை அறிந்த அந்த பெண் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தனராஜ் கணேஷ் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அருள் செல்வி, சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பம்) செண்பக பிரியா மற்றும்அதில் போலியான இன்ஸ்டாகிராம் ஐ.டி. உருவாக்கி அப்பெண்ணை பற்றி தவறாக பதிவு பரப்பியவர் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 23) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் செங்கல்பட்டுக்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.