
கரூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றவர்கள் கைது
கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்துக்கொண்டிருந்த நாகராஜ்(வயது 31), ஆனந்தராஜ்(32), அன்னக்கிளி (55), மலர்(53), தினேஷ் (32), மதிவாணன் (55), கிருஷ்ண மூர்த்தி (51), நகிலா (35), செல்வராஜ்(38), சரவணன் (47) ஆகிய 10 பேரை பிடித்து வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த 450 மது பாட்டில்களை யும் பறிமுதல் செய்தனர்.
