மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கர தீ விபத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேக் குடோனில் தீ விபத்து 1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்: 2 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயிணை கட்டுப்படுத்திய தீயணைப்பு துறையினர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள மேல ஆவணி மூல வீதி தெருவில் அசல் சிங் என்பவருக்குச் சொந்தமான சிவா பேக் கம்பெனியின் குடோன் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென குடோனில் கரும் புகையுடன் தீ பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்த தகவல் அறிந்த மீனாட்சியம்மன் கோயில் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்சார்ஜ் திரு. மாரிமுத்து அவர்கள் மற்றும் பெரியார் பேருந்து தீயணைப்பு நிலைய அலுவலர் திரு. பாலமுருகன் அவர்கள் தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக்குமார் அவர்கள் அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர் கந்தசாமி அவர்கள் என 4 தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தங்களது தீயணைப்பு வாகனங்களுடன் வந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குடோனில் பல லட்சம் மதிப்பிலான பொருட்களை இருந்ததாக முதல்கட்டத் தகவலாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நாளை காலையே இதன் முழுமையான சேதம் குறித்த தகவல்கள் தெரியவரும் என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர் இது குறித்து திலகர் திடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.