Police Department News

தென் மண்டலத்தில் கஞ்சா பறிமுதல், 494 பேர் கைது

தென் மண்டலத்தில் கஞ்சா பறிமுதல், 494 பேர் கைது

தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் நெல்லை மாநகரில், 761 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு உள்ளது.

இது தவிர 52 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடுத்தபடியாக கடந்த 3 மாத காலத்தில் 265 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி மதுரை மாவட்டத்தில் 31, விருது நகர்-26, திண்டுக்கல்-30, தேனி-41, ராமநாதபுரம்-23, சிவகங்கை-10, நெல்லை-24, தென்காசி-20, தூத்துக் குடி-25, கன்னியாகுமரி-24, நெல்லை மாநகர் -11 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 2,450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் தொடர்பு உடைய 494 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தென்மண்டலத்தில் உள்ள பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கஞ்சா மற்றும் போதை பொருட் களுக்கு எதிராக விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கஞ்சாவிற்கு எதிராக போலீசாரின் நடவடிக்கைகள் தொடரும் என்று தென் மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.