
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய இரண்டு வாலிபர்கள் கைது
மதுரை ஜெய்ஹிந்துபுரம் B.6 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட. பகுதியான சோலையழகுபுரம் 4வது தெரு சித்தி வினாயகர் கோவில் அருகே ஜெய்ஹிந்துபுர காவல் நிலைய காவலர்கள் ரோந்து பணியில் இருந்த போது அங்கே சந்தேகப்படும்படியாக இரண்டு பேர்
சுற்றித்திறிந்தனர் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் பெயர் சூரியா என்ற மண்டை ஓடு சூரியா வயது 19/24, மற்றும் பாண்டி என்ற நாய் பாண்டி வயது 19/24 என தெரிய வந்தது அவர்களின் பேரில் சந்தேகமடைந்த காவலர்கள் அவர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் 40 சென்டிமீட்டருக்கும் கூடுதலான மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய பயங்கர ஆயுதமான கத்திகள் இருந்தன. மேலும் தங்களின் எதிரிகளை பலிவாங்குவதற்காக கத்திகள் வைத்திருந்ததாக கூறி குற்றத்தை ஒப்பு கொண்டதால் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து குற்ற எண் 37/2024, u/s 25(1) (a) Arms act படி வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
