
மின்வாரிய ஊழியர்கள் பணி செய்ய லஞ்சம் கேட்கிறார்களா?
மாநிலம் முழுவதும் லஞ்சம் கேட்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் அளிக்க புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மின் இணைப்புகளில் ஏற்படும் மின் தடைகளை சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை மீறுபவர்கள் மீது 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்ற அலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம் இதற்கென 9445857593, மற்றும் 9445857594 ஆகிய எண்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
