காவலன் செயலி: டி.ஜி.பி., சைலேந்திர பாபு அறிவுரை
பெண்கள் அவசர காலங்களில் காவல் உதவிக்காக ‘காவலன் எஸ்.ஓ.எஸ்.’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
‘பெண்கள் தனியாக ஆட்டோவிலோ கார்களிலோ பயணம் செய்யும் முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 99697 77888 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். ‘காவல்துறை அந்த வாகனத்தை ஜி.பி.ஆர்.எஸ். வாயிலாக கண்காணிக்கும். இந்த தகவலை அனைத்து தளங்களிலும் பகிரவும்’ என்ற தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற தகவல் தவறானது என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்
அவர் கூறியதாவது: பெண்கள் அவசர காலங்களில் காவல் உதவிக்காக ‘காவலன் எஸ்.ஓ.எஸ்.’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இச்செயலியில் உள்ள எஸ்.ஓ.எஸ். பட்டனை அழுத்துவதன் வாயிலாக தங்களுடைய இருப்பிடம் ஜி.பி.ஆர்.எஸ். வாயிலாக அறியப்பட்டு உடனடி சேவை வழங்கப்படும். இச்செயலியில் உள்ள ‘ஷேக் டிரிக்கர்’ வசதியை பயன்படுத்தியும் காவல் துறையின் உதவியை பெற இயலும். இவ்வாறு அவர் கூறினார்.