
தென்காசி மாவட்டத்தில் போலீசார் அதிரடி குற்றத்தடுப்பு வேட்டை
தென்காசி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் அவர்களின் உத்தரவின் பேரில் Storming Operation என அழைக்கப்படும் அதிரடி குற்றத்தடுப்பு வேட்டை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் பல் வேறு பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டது. மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் 51 தங்கும் விடுதிகள் சோதனை இடப்பட்டன. குற்ற சரித்திர பதிவேடு துவக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் 16 ரவுடிகள் மீது குற்ற முன்னெச்சரிக்கை தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தீவிர வாகன சோதனை செய்து சாலை விதி மீறல்கள் போன்ற விதி மீறி குடி போதை அதிவேகம் தலை கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமை போன்ற விதி மீறியதில் 467 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 62 குற்றவாளிகளின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து தணிக்கை செய்யப்பட்டது.
மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
