தென்காசி மாவட்டத்தில் குறை தீர்க்கும் முகாம் ஒரே நாளில் 189 வழக்குகளுக்கு தீர்வு
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடப்பிரச்சனை பணப்பிரச்சனை குடும்பப்பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் நிலுவையில் இருந்து வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாம்சன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாபெரும் குறைதீர்க்கும் முகாம் அனைத்து காவல் நிலையம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகத்திலும் நடைபெற்றது.
இதில் ஒரே நாளில் 243 புகார்கள் பெறப்பட்டு
அதில் 189 புகார்களுக்கு விசாரித்து தீர்வு அளிக்கப்பட்டது
ஒரே நாளில் காவல்துறையினர் 189 புகார்களுக்கு தீர்வளித்து பயனடைந்த. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.