

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய நிலைய அலுவலர்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு. K.R. சேகர் அவர்கள் கடந்த 31 ம் தேதி பணி நிறைவு விடுப்பு பெற்றார் இதனை தொடர்ந்து அவருக்கு பணி நிறைவு பெற்று வழியனுப்பு விழா அதி விமர்சியாக மனோராஜ் மகாலில் கொண்டாடப்பட்டது இதில் மாவட்ட அலுவலர் வினோத் அவர்கள் காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற தீயணைப்புதுறை இயக்குனர் திரு. பொன்னுச்சாமி அலுவலர்கள் தீயணைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர் இதனை தொடர்ந்து கன்னியாகுமரியில் பணியாற்றி வந்த நிலைய அலுவலர் திரு. வே. ஆரோக்கியதாஜ் அவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலைய அலுவலராக 11-04-23 அன்று காலை 11 மணியளவில் பணியில் இணைந்தார்கள் இவரது பணி சிறப்பாக அமைய போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துகிறது.
