



மதுரையில் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களிலும் தீ தொண்டு நாள் அனுசரிப்பு
மக்களை காக்க தீ மற்றும் மீட்பு பணியில் ஈடுபடும் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ம் தேதி தீ தொண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் மதுரையில் உள்ள அனைத்து நிலையங்களிலும் குறிப்பாக பெரியார் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் திரு. கண்ணன் அவர்களின் தலைமையிலும், அனுப்பானடி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் திரு. கந்தசாமி அவர்களின் தலைமையிலும், மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் திரு. வே. ஆரோக்கியதாஸ் அவர்களின் தலைமையிலும் தீ தொண்டு தினம் அனுசரிக்கப்பட்டது இதில் அனைத்து தீயணைப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
