Police Department News

பெரியதப்பை பிரிவு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனைவி சம்பவ இடத்திலேயே பலி – கனவர் கவலைக்கிடம்.

பெரியதப்பை பிரிவு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனைவி சம்பவ இடத்திலேயே பலி – கனவர் கவலைக்கிடம்.

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த கூலிகானூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது.50) விவசாயி, இவரது மனைவி மல்லம்மாள் (வயது.45) முனிராஜ் மொபட்டில் இன்று மாலை
தனது மனைவியுடன் பாலக்கோடு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர், மகேந்திரமங்கலம் அருகே உள்ள பெரிய தப்பை பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது இராயக்கோட்டை நோக்கி பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் மல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், முனிராஜ் பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்த மகேந்திர மங்கலம் போலீசார் மல்லம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.