
அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
திருச்சி குடிநீர் வடிகால் வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் பணிபுரிந்து வருபவர் நடராஜன்.முசிறியை சேர்ந்த இவர்,தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்த புகாரின் அடிப்படையில், இவர் மீது திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சக்திவேல், தலா 6 பேர் கொண்ட குழுவினர் நடராஜன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமானது என கூறப்படும் ஜெயஸ்ரீ பெட்ரோல் பங்க் ஆகிய இரு இடங்களில் இன்று காலை முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
