Police Department News

மகேந்திரமங்கலம் அருகே மூன்று நாட்களாக இறந்த உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் –
டி.எஸ்.பி. சிந்து சமரச பேச்சு

மகேந்திரமங்கலம் அருகே மூன்று நாட்களாக இறந்த உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் –
டி.எஸ்.பி. சிந்து சமரச பேச்சு

தருமபுரி மாவட்டம் கூலிகானூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் (50) மனைவி மல்லம்மாள் 45) முனிராஜ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கடந்த
14ம் தேதி பாலக்கோட்டிலிருந்து வீடு திரும்பி செல்லும் போது பெரியதப்பை பிரிவு நெடுஞ்சாலையில் இராயக்கோட்டையிலிருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், முனிராஜ் பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் மல்லம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று நாட்கள் கடந்த நிலையில் போலீசார் விபத்து ஏற்படுத்தியது அரசு பேருந்துதான் எனவே பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும் என உறவினர்கள் காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த டி.எஸ்.பி. சிந்து உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று, இறந்த மல்லம்மாள் உறவினர்களிடம் விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து உறவிணர்கள் கலைந்து சென்றன்ர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.