Police Department News

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – பரிசுகள் வழங்கிய மாநகர காவல் ஆணையர்

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – பரிசுகள் வழங்கிய மாநகர காவல் ஆணையர்

திருச்சி மாநகர
கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப்பை கடந்த (31.12.2021)-ந் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் முதன்முறையாக மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி (15.04.2023) மற்றும் (16.04.2023) இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 290 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள் இளைஞர்கள், முதியவர்கள், எனவும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கலந்துக்கொண்ட மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், 10 மீட்டர் ஏர் ரைபிள் (Peep Sight) சுடும் பிரிவில் தங்கபதக்கம் வென்றார்.மேலும், ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெற்றவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (16.04.2023)-ந் தேதி பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர்செல்வன், நிர்வாக குழு உறுப்பினர் இளமுருகன் மற்றும் கிளப்பின் தலைமை அதிகாரி சந்திரமோகன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

இப்போட்டியில், வெற்றிபெற்ற 32 நபர்களுக்கு தங்கம் பதக்கமும், 32 நபர்களுக்கு வெள்ளி பதக்கமும் 32 நபர்களுக்கு வெண்கலம் பதக்கமும், ஆக மொத்தம் 96 வெற்றிபெற்ற நபர்களுக்கு பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற திருச்சி ரைபில் கிளப்பிற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் சுழற்கோப்பை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.