
பாலக்கோடு பேரூராட்சி ரேசன் கடை எண்- 1ல் முறையாக மண்ணென்னை வாங்காததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்ணெண்ணெய் கேனுடன்
சாலை மறியல்- 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ரேஷன் கடை எண்.1ல் 921 குடும்ப அட்டைகளுக்கு வட்ட வழங்கல் துறையின் மூலம் உணவு பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து மாதங்களாக முறையாக மண்ணெண்ணெய், உணவு பொருட்கள் வழங்குவதில்லை எனவும் 500லிட்டர் வழங்க வேண்டிய நிலையில் 70லிட்டர் எண்ணெய் மட்டுமே வழங்குவதாகவும்
தற்போது குறைந்த அளவே மண்ணெண்ணெய் வந்துள்ளதாக கூறி ஒரு சிலருக்கு மட்டுமே வழங்க முடியும் என விற்பனையாளர் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்
முறையான மண்ணெண்ணெய் வழங்க கோரி பொதுமக்கள் பாலக்கோடு – பெல்ரம்பட்டி சாலையில்1 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் அதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்
இதனால் இப்பகுதியில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
