
மதுரை மாநகர காவல்துறை சார்பாக மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
மதுரை நத்தம் சாலையில் புதிய பறக்கும் மேம்பாலம் கடந்த 8ம் தேதி அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்படி மேம்பாலத்தில் போக்குவரத்து சீராக்குவதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு நரேந்திர நாயர் அவர்களின் உத்தரவின்படி மேற்படி மேம்பாலத்தில் 24 மணி நேரமும் உதவி ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து காவலர்களுடன் கூடிய ரோந்து வாகனம் கடந்த 16 ம் தேதி முதல் ரோந்து செய்து வருகிறது. மேற்படி பாலத்தின் மேலே வாகனத்தை நிறுத்துவது பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது பாலத்தின் மீது வாகனங்களில் சாகசம் செய்வது பாலத்தின் மீது கேக் வெட்டுவது மற்றும் பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அமர்வது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுருத்தப்படுகிறது. அவ்வாறன செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை தெரியப்படுத்தி கொள்ளுகிறது.
