
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறித்த பெண்
ஆலங்குளம்:
புளியங்குடியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மனைவி சுப்பாத்தாள் (வயது 70). இவர் தனது உறவினர்களுடன் கல்லிடைக்குறிச்சி செல்வ தற்காக ஆலங்குளத்திற்கு பஸ்சில் வந்துள்ளார்.
அங்கிருந்து அம்பாச முத்திரம் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்த போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சுப்பாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சி களின் அடிப்படையில் தப்பியோடிய அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
