குற்றங்கள் குறைய பள்ளிகளில் சட்டக் கல்வியை அடிப்படை கல்வியாக கொண்டு வர வேண்டும்
சட்டங்கள் தெரிந்து வைத்திருக்கணும் அப்படியினு எந்த சட்டமும் சொல்லலே ஆனாலும் சட்டம் தெரியாமல் தப்பு பண்ணிட்டேன் அதனால் என்னை மண்ணிக்கனும் விடுதலை செய்யனும் அப்படியினு யாரும் கேட்க முடியாது என்பதுதான் உண்மை.
இந்திய தண்டனை சட்டம் 1860 இன் பிரிவு 82 இன் படி 7 வயதிற்குட்பட்ட குழந்தை செய்யும் எந்த செயலும் குற்றமல்ல. எனவே அரசு சட்ட கல்வியை அடிப்படை கல்வியாக கொண்டு வர வேண்டும் குழந்தைகளுக்கு ஆடிப்படையிலேயே எது குற்றம் எது குற்றமில்லை என தெரிந்து அவர்கள் செயல் பட்டால் நாட்டில் குற்றங்கள் குறையும்
நாமும் நமது குழந்தைகளுக்கு சட்டங்களை கற்று கொடுக்க வேண்டும் தற்காப்பு விழிப்புணர்வையும் குழந்தை பருவம் முதலே கற்று கொடுக்க வேண்டும்.