Police Department News

விருதுநகரில் அரசுப்பேருந்து கண்ணாடி மீது கல்வீசிய மர்ம நபர்கள் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்

விருதுநகர் மாவட்ட செய்திகள்:-

விருதுநகரில் அரசுப்பேருந்து கண்ணாடி மீது கல்வீசிய மர்ம நபர்கள் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்

அதன் விபரம் பின் வருமாறு….

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காரியாபட்டி வரை செல்லும் அரசு பேருந்து நேற்று இரவு விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள மேம்பாலத்தில் வந்தபொழுது எதிரே இருந்து வந்த மர்ம நபர்கள் இருவர் பேருந்தின் முன்புற கண்ணாடி மீது கல் வீசி விட்டு ஓடி விட்டனர். இதனால் பேருந்தின் முன்புற கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதமானது .

உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் பயணிகளுக்கு எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இதையடுத்து அங்கு வந்த மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து இதே சம்பவம் திருச்சுழி,அருப்புக்கோட்டையிலும் நடந்ததால்

இந்த சம்பவம் குறித்து DIG முனைவர்,திருமதி,ஆனிவிஜயா IPS அவர்கள் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழி காவல் நிலையத்திற்கு வந்தார் அங்கு இது குறித்து சக அதிகாரிகளிடம் ஆலோசனை செய்துவருகிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநிலசெய்தியாளர்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.