Police Department News

ரவுடிகளுக்கு ஆப்பு வைக்கும் ஆய்வாளர்

ரவுடிகளுக்கு ஆப்பு வைக்கும் ஆய்வாளர்

மதுரை மாவட்டம் அண்ணா நகர் E 3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான வண்டியூர், யாகப்பநகர், பாலாஜி நகரில் வசித்து வருபவர் பாலன் மகன் சுரேஷ்குமார், இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார், மேலும் இந்து முன்னனியில் பொருளாளராகவும், இருந்து வருகிறார் இவர் தீர்த்தக்காடு லெக்ஷிமி டீ கடை அருகில் இந்து முன்னனி கட்சி கொடிக் கம்பத்தை ஊன்றி உள்ளார். இந்த மாதம் 5 ம் தேதியன்று மதியம் சுமார்3 மணியளவில் வண்டியூர், செம்மண்ணு சாலை, கவிபாரதி தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் மகன் செல்லப்பாண்டி என்ற செல்லாத்தா என்பவன் கட்சி கொடிக்கம்பத்தை அடித்து பிடிங்கி போட்டு விட்டான் இது தகவல் அறிந்த சுரேஷ்குமார் தனது கட்சி நிர்வாகி கனேஷ்பாண்டி என்பவருடன் சேர்ந்து அண்ணாநகர் E3, காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் சுமார் 10.30 மணியளவில் தீர்த்தகாடு லெக்ஷிமி டீ கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த செல்லப்பாண்டி என்ற செல்லாத்தா ஏன்டா என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என் மேலே போலீஸில் புகார் கொடுப்பீயா?, இந்தா இதையும் சேர்த்து மீண்டும் புகார் கொடு என்று கூறிக் கொண்டே தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த பெரிய வாளை எடுத்து சுரேஷ்குமார் கழுத்தை நோக்கி வீசியுள்ளார், ஆனால் சுரேஷ்குமார் சுதாரித்துக் கொண்டு விலகிக் கொள்ளவும் வாள் அவர் சட்டை காலரை கிளித்து விட்டது, இதனால் நிலை தடுமாறி கீழே விழவும் செல்லாத்தா வாளை சுரேஷ்குமார் கழுத்தில் வைத்து அழுத்தி கொண்டே அவர் சட்டை பையிலிருந்த 250 ரூபாயை பறித்து கொண்டார். இதனால் சுரேஷ் பயத்தில் சத்தம் போடவும் பக்கத்தில் இருந்தவர்கள் அவனை பிடிக்க வந்த போது அவர்களை பார்த்து எவனாவது என்னை பிடிக்க வந்தால் உங்களையும் வெட்டி விடுவேன் என மிரட்டியபடியே தப்பி ஓடி விட்டான், இதனையடுத்து சுரேஷ்குமார் அண்ணாநகர் E3, காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஆய்வாளர் பூமிநாதன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் ரீகன் அவர்கள் வழக்கு பதிவு செய்து செல்லப்பாண்டியை கைது செய்தனர்

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.