
தேசிய குடிமை பணிகள் தினம்
தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day) என்பது இந்தியாவின் தேசிய தினங்களில் ஒன்றாகும். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது. இத்தினம் 2006 ம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21ம் திகதி இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
