

மதுரையில் ஜனவரி 23 ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா
நேற்று (10/01/2024) மாலை 7 மணி அளவில் ஜெயா திருமண மஹாலில் ஆனையூர் பகுதி தி.மு.க கழக செயல் வீரர்கள் கூட்டம் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆனையூர் பகுதி கழக செயலாளர் மருது பாண்டியன் அவர்களின் ஏற்பாட்டில், ஆனையூர் பகுதி வட்டக் கழக செயலாளர்கள் பகுதி கழக நிர்வாகிகள் கழக அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஜனவரி 23ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவில் பெரும் எழுச்சியோடு கலந்து கொண்டு சிறப்பிப்பது சம்பந்தமாக, அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்
