
மதுரையில் சட்ட ஒழுங்கை காக்கவும் குற்றங்கள் குறைக்கவும் கூடுதல் காவல் நிலையங்கள் தேவை
மதுரை காவல் ஆணையருக்கு கீழ் 25 காவல் நிலையங்கள் 4 மகளீர் காவல் நிலையங்கள் 10 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன.
2025 ஜனவரி 1 முதல் திருப்பரங்குன்றம் திருநகர் அவனியாபுரம் காவல் நிலையங்கள் நகருடன் இணைக்கப்பட்டன. சிலைமான் கருப்பாயூரணி ஊமச்சிகுளம் காவல் நிலையங்களில் ஒரு சில பகுதிகள் நகருடன் இணைக்கப்பட்டன. பின்னர் திருப்பாலை மாட்டுத்தாவணி காவல் நிலையங்கள் உறுவாக்கப்பட்டன. இதனால் நகரின் விரிவாக்க பகுதிகளில் குற்றங்களை கட்டுப்படுத்தவும் ரோந்து செல்லவும் போலீசார்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதை தவிர்க்க அதிக பகுதிகளை கொண்ட காவல் நிலையங்களை இரண்டாக பிரிக்க பரிந்துரைக்கப்பட்டது.
இதன்படி எஸ்.எஸ்.காலனி கரிமேடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளை பிரித்து கோட்சடை காவல் நிலையம், தெப்பகுளம் அவனியாபுரம் கீரைத்துரை காவல் நிலையங்களின் பகுதிகளை பிரித்து அனுப்பானடி திருப்புரங்குன்றம் ஆஸ்டின்பட்டி போக்குவரத்து பகுதிகளை உள்ளடக்கிய திருநகர் போக்குவரத்து ஸ்டேசனை உறுவாக்க வேண்டும் இது சம்பந்தமாக நேற்று முன் தினம் நடந்த போலீஸ் மானியக் கோரிக்கையில் இது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்றங்களை தடுக்கவும் கூடுதல் காவல் நிலையங்களை உடனடியாக அமைக்க அரசு ஆணை பிறயிக்க வேண்டும்.
