Police Department News

பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் பலி.

பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் பலி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் என்பவரின் மனைவி பார்வதி (வயது.32) இவர் பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் உள்ள கார்மென்ட்ஸ்சில் வேலை செய்து வருகிறார்,
கடந்த 16ம் வேலை முடிந்து அதே பகுதியில் உள்ள தோழி கவிதா என்பவரின் வீட்டிற்க்கு பணம் கொடுக்க சென்றவர், மாடியில் ஏறும் போது கையிலிருந்த சாவி தவறி தகற சீட் மீது விழுந்தது, அருகில் இருந்த கம்பி மூலம் சாவி எடுக்க முயற்சி செய்த போது கம்பி மேலே இருந்த மின் கம்பத்தின் ஒயரில் பட்டதும் மின்சாரம் பாய்ந்து அலறினார்,
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பாலக்கோடு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.