திரு.சக்கரவர்த்தி, த/பெ.தனபால், பாபு நகர், ஐய்ராவதநல்லூர், மதுரை என்பவர் வெண்கலக்கடைதெருவில் மாவு கடை வைத்திருப்பதாகவும், கடந்த 29.11.2019 அன்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் தான் வைத்திருந்த ரூபாய்.4,47,500/- தவரவிட்டதாகவும், அவற்றை கண்டுபிடித்து தரும்படியும்
கடந்த 30.11.2019 தேதி மதுரை மாநகர் B3-தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் அவர் கொடுத்த புகாரை பெற்று, வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர் திருமதி.கீதா தேவி அவர்கள் CCTV கேமிரா பதிவுகளை சேகரித்து புலன் விசாரணை நடத்திவந்தார். இன்று (03.12.19) திரு.பூபாலன், த/பெ.ஆனந்த மூர்த்தி, அந்தோணி மூப்பனார் தெரு, பழைய குயவர் பாளையம், மதுரை என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்களிடம் சாலையில் கிடந்த கட்டை பையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் முன்னிலையில் அதன் உரிமையாளர் திரு.சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்தார். மேற்படி பணம், விலை உயர்ந்த சேலைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை நேர்மையான முறையில் உரியவரிடம் ஒப்படைத்த திரு.பூபாலன் என்பவரை காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.