

பாலக்கோட்டில் முறைகேடாக அனுமதியின்றி கட்டப்பட்ட இந்துஅறநிலைத்துறை ஆய்வாளர் புதிய அலுவலக கட்டிடம்.
நிதி எங்கிருந்து வந்தது பொதுமக்கள் கேள்வி.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இந்து அறநிலைத்துறை ஆய்வாளராக துரை,செயல்அலுவலராக சிவா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
பாலக்கோடு சுற்றியுள்ள ஸ்ரீதிரெளபதிஅம்மன், ஸ்ரீபுதுர்மாரியம்மன் கோவில், செல்லியம்மன் சாக்கியம்மன் கோவில், ராமசாமி கோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு, கோவில்களுக்கு சொந்தமான பலஆயிரம் ஏக்கர் நிலம் , வீடு மற்றும் கடை உள்ளிட்டவை
இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
தமிழக அரசு மூலம் கோவில் பராமரிப்பு பணி, பூஜை மற்றும் திருவிழாக்கள் நடத்த கோவில் சொத்துக்ளை ஏலம் விட்டும், வரி வசூல் செய்து அதனை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டிய கோவில் அதிகாரிகள் ஒரு சிலருடன் கூட்டு வைத்துக்கொண்டு கோவில் நிலங்களை ஏலம் விடாமல் காலம் தாழ்த்துவதும்
ஒரு சார்பாக செயல்பட்டு வருவதன் மூலம் அதிகாரிகள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் ஆக்கிரமிப்பாளர்களின் மூலம் புதியதாக ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் அனுப்பினர்.
இது தொடர்பாக சிக்கார்தன அள்ளியை சேர்ந்த முனியப்பன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பாலக்கோடு இந்து அறநிலைய ஆய்வாளர் அலுவலகம் எவ்வாறு கட்டப்பட்டது என கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பொது தகவல் அதிகாரி அப்படி ஒரு கட்டிடமே இல்லை என நடிகர் வடிவேல் பாணியில் அப்படி ஒரு கட்டிடம் கட்டியதாக அரசு பதிவேட்டில் இல்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு வரும் நிலையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு பாலக்கோடு கோவில் அதிகாரிகள் உடந்தையாக உள்ளதாகவும்
அதற்காக இந்த கட்டிடம் ஆய்வாளருக்கு இலஞ்சமாக கட்டி தரப்பட்டதாகவும், இது குறித்து தமிழக அரசு உரிய விசாரனை நடத்தி கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
