Police Department News

மதுரை அரசு பொருட்காட்சி; அமைச்சர் திறந்து வைத்தார்

மதுரை அரசு பொருட்காட்சி; அமைச்சர் திறந்து வைத்தார்

சித்திரை திருவிழாவை யொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமி நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொருட்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார்.

வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன்,

எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மணிவண்ணன்.

டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி, ஐ.சி.டி.சி ஆற்றுநர்கள் ரவிக்கண்ணன், வீரபத்திரன், ஜெயபாலன், தொண்டு நிறுவனங்களான பிரதர் சிகா ரூபி, பக்கீர் வாவா, பேஸ் அறக்கட்டளை பாரதி கண்ணம்மா, தாய் விழுதுகள் அறக்கட்டளை மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு பொருட்காட்சி திறப்பு விழாவில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.