Police Department News

பாலக்கோடு அருகே குப்பன் கொட்டாய் கிராமத்தில் நிலத்தில் இருந்த மரம் யாருக்கு சொந்தம் என்ற தகராறில் அடிதடி
இருவர் கைது கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் .

பாலக்கோடு அருகே குப்பன் கொட்டாய் கிராமத்தில் நிலத்தில் இருந்த மரம் யாருக்கு சொந்தம் என்ற தகராறில் அடிதடி
இருவர் கைது கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் .

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கல்கூடபட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது.40)
இவருக்கு குப்பன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலம் உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால் இவரது நிலத்தில் இருந்த தேக்கு மரம் சாய்ந்து பக்கத்து நிலமான காண்டீபன் என்பவரது நிலத்தில் விழுந்தது,
காண்டீபன் தேக்கு மரத்தை வெட்டி எடுத்து சென்று விட்டார்,
இன்று மீண்டும் ஒரு மரம் சரிந்து காண்டீபன் நிலத்தில் விழுந்தது,
அதனை வெட்ட சென்ற சக்திவேலுக்கும், கான்டீபனுக்கும் தகராறு ஏற்பட்டது.
என் நிலத்தில் விழுந்த மரம் எனக்குதான் சொந்தம் என காண்டீபன் தகராறில் ஈடுபட்டார்,
காண்டீபனுக்கு ஆதரவாக அவரது 2 மகன்களான பார்த்திபன், அனந்தராமன் ஆகியோர் சக்திவேவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தகராறு முற்றியதில் காண்டீபன் மற்றும் அவரது மகன்கள் கொடுவாளால் சக்திவேலை தாக்கியதில் சக்திவேல் படுகாயமடைந்தார், அவரது குடும்பத்தினார் அவரை மீட்டு பாலக்கேடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காண்டீபன் (வயது .70), அனந்தராமன் (வயது .21) ஆகிய இருவரையும் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான பார்த்திபனை தேடி வருகின்றனர்.
தேக்கு மரத்திற்க்கு உரிமை கொண்டாடி அடிதடி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.