
மெரினா நொச்சிக்குப்பத்தில் மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் கைது
மெரினா நொச்சிக்குப்பம் மீனவர்கள் கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள 324 வீடுகளை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வந்தது.
அவர்களிடம் போலீசார் சமரச பேச்சு நடத்தி வந்தனர். இருப்பினும் மீனவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை, இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.
