
தேனி மாவட்டத்தில் புதிதாக பயிற்சி முடித்த ஊர்க்காவல் படையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
தேனி மாவட்டம்
02.04.2025
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,இ.கா.ப., அவர்கள் மாவட்டத்தில் புதிதாக பயிற்சி முடித்து மாவட்டத்தில் பணிபுரிய 38(ஆண்,பெண்) ஊர்காவல் படையினரை பணிக்கு சேர்ந்தும், மக்கள் பணியில் ஈடுபடும் போது எவ்வாறு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை பற்றி எடுத்துக் கூறி அறிவுரைகளை வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊர்க்காவல் படையை சேர்ந்த படை தளபதி, சரக உதவி தளபதி, வட்டார தளபதி, துணை வட்டார தளபதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
