
பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தற்காலிக கடை மற்றும் இரு சக்கர வாகன ஆக்கிரமிப்புக்களால் பயணிகள் அவதி .
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்திற்க்கு நாள் ஒன்றுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், புறநகர் பேருந்து பகுதி சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.
இந்நிலையில் குறுகிய பேருந்து நிலையத்தில் கடைகாரர்கள் பேருந்து நிலையத்த்தை ஆக்கிரமித்து கடையை நீட்டிப்பு செய்வதாலும் அதனை தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள், சொகுசு கார்கள், தள்ளுவண்டி உள்ளிட்டவைகளும் பேருந்து நிலையத்தை ஆக்கிமித்துள்ளதால் பயணிகளும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள். பேருந்து நிலையத்திற்க்குள் செல்ல கடும் அவதி அடைந்து வருகின்றனர்,
மேலும் குறுக்கு, நெடுக்காக நிறுப்படும் வாகனங்களால் 108 ஆம்புலன்ஸ் செல்ல சிக்கல் ஏற்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை .
