
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் நினைவிடத்தில் மரியாதை
கடந்த 2020-ம் ஆண்டு மே 4-ந்தேதி ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சந்திரசேகரும் ஒருவர்.
இந்நிலையில் வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம்குமார் தலைமையில் கவுரவத்தலைவர் மணி மற்றும் செயலாளர் முருகன், துணைச் செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் அவரது நினைவத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் போது அவரது மனைவி ஜெனிபர் கிறிஸ்டி மற்றும் தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் உடன் இருந்தனர்
