
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக தாய் உள்பட 3 பேர் கைது
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது சாவில் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், மாணவியின் தாயாரை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அந்த பெண் மற்றொரு நபருடன் பழக்கத்தில் இருந்து வந்ததாகவும், அதற்கு அவரது உறவினர் பெண் ஒருவர் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனவிரக்தி அடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாயார், அவருடன் பழக்கத்தில் இருந்த நபர் மற்றும் உடந்தையாக இருந்த பெண் ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
