போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
29.10.2020 திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த விஜய் பாபு (24) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை தொடர்ந்து விஜய் பாபு போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று 29.10.2020 ம் தேதி உயர்திரு நீதிபதி புருஷோத்தமன் அவர்கள் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி விஜய் பாபு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு விரைவில் தண்டனை கிடைக்க உதவியாக இருந்த பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.தேன்மொழி அவர்கள் மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திருமதி.கற்பகவள்ளி அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
