
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ருகே மைத்துனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிள்ளையார்கோவில் புரத்தை சேர்ந்தவர் வைர முத்து (வயது 38). இவரது மனைவி கவிதா. வைரமுத்துக்கு குடி பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று கோவில் திருவிழா வுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த கவிதாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கவிதா அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பி கார்த்திக்கிடம் இது பற்றி கூறினார்.
உடனடியாக அங்கு வந்த கார்த்திக், குடித்து விட்டு ஏன் தகராறு செய்கிறீர்கள் என வைரமுத்துவிடம் தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் வாக்கு வாதம் முற்றி கை கலப்பாக மாறியது. அப்போது கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வைரமுத்துவை குத்தினார். இதையடுத்து அங்கிரு ந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி வைரமுத்து கொடுத்த புகாரின்பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மைத்துனரை கத்தியால் குத்திய கார்த்திக்கை கைது செய்தனர்.
