தலைமறைவான கொலை குற்றவாளிகள் சென்னையில் கைது.
மாதவரம் பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டு தலைமறைவான குற்றவாளி கிஷோர் ( எ ) கிறிஸ்டோபர் என்பவர் M-2 மாதவரம் பால் பண்ணை காவல் குழுவினரால் கைது .2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது (16.3.2021).
M-2 Madhavarm Milk Colony police arrested murder case absconding accused at Madhavaram area (16.03.2021).
சென்னை, மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் வீண் தகராறு செய்து அவரை தாக்கி கீழே தள்ளியுள்ளனார். தாக்குதலில் காயமடைந்த ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது குறித்து ராஜனின் உறவினர் டேவிட் M-2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்நிலையில் காயமடைந்த ராஜன் சிகிச்சை பலனளிக்காமல் 06.03.2021 அன்று இறந்து விட்டதால் மேற்படி கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு குற்றவாளி பாண்டியன் (எ) மாயகிருஷ்ணன், வ/29, மாத்தூர் என்பவரை கைது செய்து அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மேற்படி கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி கிஷோர் ( எ ) கிறிஸ்டோபர் , வ/32, காசிமேடு என்பவரை 16.03.2021 அன்று M-2 மாதவரம் பால்பண்ணை காவல் குழுவினர் கைது செய்தனர்.அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
On 26.02.2021, at Chinna Mathur 2 unknown persons have attempted to murder one Rajan, M/40 of Manali. In this regard, Rajan’s cousin David preferred a complaint at the M-2 Milk Colony Police Station and a case was registered. While undergoing treatment, the injured Rajan died in the hospital. Hence section of law of this case was altered from attempt to murder to Murder. M-2 Madhavaram Milk Colony Police personnel have arrested the accused Pandian @ Mayakrishnan and legal action was pursued against him. Following to this, Kishore @ Christopher, M/32, of Kasimedu, an absconding accused concerned in this case was arrested by M-2 Madhavaram Milk Colony Police and 2 two wheelers were recovered from him. Legal action is being pursued.
